vk2

Advertisment

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பல்வேறு மருத்துவ சிகிச்சைக்காக 7 ந் தேதி சென்னையிலிருந்து விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார். அவருடன் அவரது மனைவி பிரேமலதாவும் உடன் செல்கிறார். மருத்துவ சிகிச்சைகள் முடித்து தனது பிறந்த நாளான ஆகஸ்ட் 25 க்கு முன்போ அல்லது செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் சென்னை திரும்புவதாக திட்டமிடப்பட்டுள்ளது.

v11

தங்களது கட்சி தலைவரான விஜயகாந்த் நல்ல சிகிச்சை பெற வேண்டும். உடலில் எந்த தொந்தரவும் இருக்க கூடாது. முன்பு போல் நன்றாக நடக்க வேண்டும். கனீர் குரலில் பேச வேண்டும் என தென் சென்னை மாவட்ட தே.மு.தி.க.நிர்வாகிகள், தொண்டர்கள் இன்று சிறப்பு பிராத்தனை பூஜைகள் செய்தனர். ஒரு மண்டபத்தில் 108 விளக்கு பூஜை செய்த அவர்கள் சிகிச்சையில் பூரண நலம் பெற்று விஜயகாந்த் திரும்ப வேண்டும் என வேண்டிக் கொண்டனர்.