தேமுதிக கட்சித்தலைவர் விஜயகாந்த் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்து கட்சித் தொண்டர்களைச் சந்தித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தீபாவளி, பொங்கல் மற்றும்அவரது பிறந்தநாள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளின் போது தனது கட்சியின் தலைமை அலுவலகத்திற்குவருகை தந்து கட்சித் தொண்டர்களைச் சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில், கடைசியாக அவரது பிறந்தநாளான ஆகஸ்ட் மாதம் 25 ஆம்தேதி கட்சியின் தலைமைஅலுவலகத்தில்தொண்டர்களைச் சந்தித்திருந்தார்.
இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சித் தலைமைஅலுவலகத்திற்கு விஜயகாந்த் வருகை தந்து கட்சித் தொண்டர்களைச் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரைபார்க்கஏராளமானதொண்டர்கள் குவிந்திருந்த நிலையில், விஜயகாந்தைப் பார்த்ததும் கேப்டன் கேப்டன் எனக் கோஷம் எழுப்பினர்.