Advertisment

பிறந்தநாளை முன்னிட்டு தொண்டர்களைச் சந்தித்த விஜயகாந்த்

Vijayakanth met the party members on the occasion of his birthday

தேமுதிக கட்சியின் தலைவரான நடிகர் விஜயகாந்த்தின் 70வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுக்க அக்கட்சியினரால் கொண்டாடப்படுகிறது. அக்கட்சியின் தொண்டர்கள் பல இடங்களில் இனிப்புகள் வழங்கியும், நலத் திட்ட உதவிகளைச் செய்தும் விஜயகாந்த்தின் பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர். இதனிடையே விஜயகாந்த்தின் பிறந்தநாளுக்கு முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

Vijayakanth met the party members on the occasion of his birthday

ஆண்டுதோறும் பிறந்தநாள் அன்று சென்னையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தொண்டர்களைச் சந்திப்பதை விஜயகாந்த் வழக்கமாக வைத்து வருகிறார். அந்த வகையில் பிறந்தநாளான இன்று விஜயகாந்த் தலைமை அலுவலகத்தில் தனது கட்சித்தொண்டர்களை நேரில் சந்தித்தார். அவரைப் பார்த்த மகிழ்ச்சியில் தொண்டர்கள் கத்தி ஆரவாரம் செய்தனர்.

Advertisment

dmdk vijayakanth
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe