Skip to main content

சுனாமியால் பல உயிர்களை இழந்தோம், கஜா புயலால் ஐம்பதாண்டு வாழ்வாதாரத்தை இழந்தோம்: விஜயகாந்த்

Published on 20/11/2018 | Edited on 20/11/2018
premalatha



சுனாமியால் பல உயிர்களை இழந்தோம். கஜா புயலால் ஐம்பதாண்டு வாழ்வாதாரத்தை இழந்தோம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை தேமுதிக சார்பில் கழக பொருளாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் மற்றும் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தும், தேமுதிக சார்பில் நிவாரண உதவிகளை வழங்கியும், மருத்துவ முகாம்களை அமைத்தும், குடிநீர் வழங்கியும் பாதிக்கப்பட்டவர்களுடன் உணர்வுகளை பகிர்ந்துகொண்டார்கள். 


நேரில் பார்வையிட்டபொழுது மின்சாரம் முழுவதுமாக பாதிக்கப்பட்டு, மக்கள் குடிநீருக்கு கூட தவிக்கின்ற நிலைமையை நேரில் பார்த்து அறிந்தோம். நெடுஞ்சாலை பிரிவை தாண்டி கிராமத்தின் உள்பகுதிகள் முழுவதுமாக பாதிக்கப்படிருக்கிறது. அதில் குடிசைகள், ஓட்டுவீடுகள் புயல் காற்றினால் தூக்கிஎறியப்பட்டு, அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியாகிருக்கிறது. 
 


விவசாயிகளின் அடிப்படை வாழ்வாதாரங்களான தென்னை மரம், வாழை மரம், நெற் பயிர்கள் முற்றிலும் அழிந்து போயிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு தனி முகாம்கள் அமைக்காமல் பள்ளிக் கூடங்களில் தங்கவைக்கப்பட்டு இருக்கிறார்கள். இயல்பு வாழ்க்கை முழுவதுமாக திரும்பி இருக்கிறது என்ற ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்குவதற்கு பள்ளிகள் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. 

 

premalatha

நிலைமையை சீர்செய்யும் முன் பள்ளிகளை திறப்பது, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பிய பிறகு பள்ளிகளை திறக்கவேண்டும். எனவே ஒருவார காலத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை தேமுதிக வலியுறுத்துகிறது. புயலால் பாதிக்கப்பட்ட மின் கம்பங்களை பிறமாவட்டங்களில் இருந்து பணியாளர்களை அழைத்து போர்கால அடிப்படையில் உடனடியாக சீர்செய்யப்பட வேண்டும். 
 

மின்சாரம் சீர்செய்யப்படும் வரை ஜெனரேட்டர் போன்ற உதவிகளால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு உடனடியாக குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். தமிழக அரசு அறிவித்த ஆயிரம் கோடி நிவாரண உதவியை இடைத்தரகர்கள் இடையூறு இல்லாமல் மக்களுக்கு நேரடியாக, காலதாமதம் செய்யாமல் வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். 
 

மாவட்ட ஆட்சியர் முதல் மாவட்ட அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் இவர்களின் அலட்சியப் போக்கால் மக்கள் சாலையில் வாழ்கின்றதை கேட்கும்பொழுது மனது மிகவும் வேதனை அடைகிறது. இந்நிலையில் அரசியல் பாகுபாடின்றி சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அவரவர்கள் முடிந்த உதவிகளை செய்யவேண்டுமென தேமுதிக சார்பில் கேட்டுக்கொள்கிறேன். 
 

பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அரசு உடனடியாக பார்வையிட்டு தகுந்த உதவிகளை உடனடியாக வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். தமிழக அரசு அதற்குண்டான பணிகளை உடனே செய்யவேண்டும் என தேமுதிக சார்பில் வலியுறுத்துகிறேன். 


 

premalatha


 

மேலும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் திரு.நிர்மல்ராஜ் மற்றும் அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், எதிர்கட்சியாளர்கள் தங்களை யாரும் சந்திக்கவில்லை என்று பெரும் ஆவேசத்தை காட்டியிருக்கிறார்கள். அதனால் மாவட்ட ஆட்சியருடன், அதிகாரிகள், அந்தந்த சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள் பொதுமக்களை நேரில் அணுகி அவர்களுடைய குறையை தீர்க்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். 
 

அதேபோல் மக்களும் தங்களுடைய ஆவேச உணர்வுகளை மறந்து, வன்முறைக்கு இடம்கொடுக்காமல் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். இன்றைக்கு மக்களின் அத்தியாவசிய தேவையான மண்ணெண்னை, குடிநீர், மின்சாரம் போன்றவைகளை போர்கால அடிப்படையில் செய்திடவேண்டும். தமிழகத்திலேயே டெல்டா மாவட்ட மக்கள் அகதிகள் போல் வாழ்கின்ற நிலைமை போர்கால அடிப்படையில் மாற்றிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'14+1 தரும் கட்சியுடன் தான் கூட்டணி' - பிரேமலதா விஜயகாந்த்

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
'Alliance only with the party that gives 14+1' - Interview with DMUDHIKA Premalatha Vijayakanth

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் இன்று (07.02.2024) காலை 10 மணியளவில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை தொடர்ந்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விஜயகாந்த்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தேமுதிக தனித்து போட்டியிட வேண்டும் என பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். 14 மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தரும் கட்சியுடன் தான் தேமுதிக கூட்டணி அமைக்க வேண்டும் எனவும் மாவட்டச் செயலாளர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். புதியதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள். தேமுதிகவின் கொள்கை என்ன? சித்தாந்தம் என்ன? என்றெல்லாம் கேள்வி கேட்க வேண்டாம். அதையெல்லாம் விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்கும்போதே அறிவித்துவிட்டார்'' என்றார்.

Next Story

தேங்காய் சிரட்டை மாலையுடன் போராடிய தேமுதிக

Published on 19/08/2023 | Edited on 19/08/2023

 

dmdk who fought wearing a garland of coconuts

 

கஜா புயல் புரட்டிப்போட்ட பிறகு தமிழக விவசாயிகளால் இன்னும் எழ முடியவில்லை. இதனால் ஒட்டுமொத்த விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்கள் முடங்கி 5 ஆண்டுகள் ஆகிறது.

 

புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் பிரதான விவசாயம் தென்னை. அதைச் சார்ந்து தென்னையிலிருந்து உப பொருட்களை தயாரிக்கும் நூற்றுக்கணக்கான சிறு குறு தொழில்களும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பெரும் வணிகமும் நடந்தது. கஜா புயலுக்கு தென்னை மரங்கள் அழிந்ததோடு, அதனைச் சார்ந்த தொழில்களும் நலிவடைந்ததால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்கின்றனர்.

 

இதனால் தேங்காய் விலையும் வீழ்ச்சியடைந்து, தென்னை விவசாயிகள் மேலும் மேலும் கடனாளிகளாகி வருகின்றனர். இந்நிலையில், தேங்காய் விலையை உயர்த்த வேண்டும். அரசே தேங்காய் கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்றும் ஆங்காங்கே தேங்காய் உடைப்பு கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடந்து வருகிறது. இதேபோல புதுக்கோட்டை மாவட்டம் அரசர் குளத்தில், மாவட்ட தேமுதிக சார்பில் நடந்த தேங்காய் உடைப்பு போராட்டத்தை மாவட்டச் செயலாளர் மன்மதன் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் தேங்காய் சிரட்டைகளை மாலையாக கோர்த்து கழுத்தில் போட்டுக் கொண்டு கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிவில் தேங்காய்களை சாலையில் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.