Advertisment

மீன் வலைகளை எரித்து சாம்பலாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த்

vijayakanth

மீன் வலைகளை எரித்து சாம்பலாக்கிய, மர்ம நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனதே.மு.தி.க. நிறுவனத் தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே உள்ள திருமலை நகர் கடற்கரை பகுதியில், மீனவர்களின் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன் வலைகளை மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்திய சம்பவத்தைக் கேள்வியுற்று மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

Advertisment

ஏற்கனவே கரோனா வைரஸ் பாதிப்பினால், பல நாட்களாக மீன்பிடித் தொழிலுக்குச் செல்லாமல், மீனவர்கள் வருமானமின்றி கடுமையான வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில், இத்தகைய கொடுஞ்செயலில் ஈடுபட்டவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கவேண்டும்.

உரலுக்கு ஒருபக்கம் இடி, மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல, கரோனாவால் ஒரு புறம் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மறுபுறம் மீன்பிடி வலைகளை இழந்து மீனவர்கள் பொருளாதார ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, தமிழக அரசு உடனடியாக உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்கவேண்டும் அல்லது வங்கிகள் மூலம் வாழ்வாதாரம் இழந்துள்ள மீனவர்களுக்குக் கடன் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

dmdk Fishermen thiruvallur vijayakanth
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe