Advertisment

தொண்டர்களை பார்த்ததும் உற்சாகம் அடைந்த விஜயகாந்த்! (படங்கள்)

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்க சென்றிருந்தார். சிகிச்சைக்காக சென்ற அவர் இன்று சென்னை திரும்புவார் என்று தேமுதிக தலைமை அறிவித்திருந்தது.

Advertisment

இதனையொட்டி தேமுதிக தொண்டர்கள் சென்னை விமான நிலையத்தில் குவிந்திருந்தனர். சென்னை விமான நிலையத்திற்கு அதிகாலையிலேயே அவர் திரும்பினாலும் 10 மணி நேரத்திற்கு பிறகுதான் வெளியே வந்தார்.

Advertisment

பேட்டரி காரில் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோர் வந்ததை பார்த்து தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். விஜயகாந்த் வாழ்க, தலைவர் வாழ்க என தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பினர். பின்னர் அவர் டெம்போ வேனில் ஏறினார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து அவரது இல்லம் செல்லும் வரை வழிநெடுகிலும் தேமுதிகவினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டர்களை பார்த்து அவர் கை அசைத்தப்படியே வந்தார்.

vijayakanth
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe