Advertisment

சிகிச்சைக்கு பின் தோன்றிய விஜயகாந்த்; பிரேமலதாவிற்கு முக்கிய பதவி

Vijayakanth appeared after treatment; Important post for Premalatha

தேமுதிகவின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

Advertisment

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கலந்துகொண்டார். அண்மையில் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் உடல் நலம் தேறி வர வேண்டும் என திரை பிரபலங்கள் மட்டுமல்லாது ரசிகர்கள், அரசியல் பிரபலங்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் முதல் முறையாக கலந்துகொண்டார். அவருடன் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் நடத்தப்பட்ட ஆலோசனைப்படி கட்சியின்பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

dmdk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe