Skip to main content

’தை மாதம் கேப்டன் எப்படி  மீண்டு வருகிறார் என்பதை பாருங்கள்...’ -விஜயகாந்த் மகன் கண்ணீர் பேச்சு

Published on 26/08/2019 | Edited on 26/08/2019

 

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உமராபாத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்  பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தேமுதிக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்துகொண்டு கேக் வெட்டினார். 

 

அதே மேடையில் ஏழை, எளிய பெண்களுக்கு  தையல் இயந்திரங்கள், சலவைப் பெட்டிகள்  இரண்டு லட்ச ரூபாய் மதிப்பில் வழங்கினார். 

 

v

 

நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின்னர் பேசிய விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன், தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றாக உள்ளார். தன்னுடைய பிறந்த நாளில் தன்னை பார்க்க வந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். 2

 

020ஆம் ஆண்டு தை மாதத்திற்கு பின்னர் கேப்டன் எப்படி மீண்டு வருகிறார் என்பதைப் பாருங்கள் எனச்சொன்னவர், அதன்பின்னர் பேசமுடியாமல் மேடையில் தொண்டர்களுக்கு மத்தியில் கண்ணீர்விட்டு அழுதபடியே பேச தொடங்கியவர், விஜயகாந்த் உடல்நிலை சீராகவும், நன்றாகவும் உள்ளது. ஆனால் அனைவரும் அவருடைய உடல்நிலை குறித்து அவதூறாக பேசிவருகிறார்கள். அவை அனைத்தையும் தாங்கிக்கொண்டு என்னுடைய தாயார் பிரேமலதா கட்சியை வழி நடத்தி வருகிறார். எனவே தொண்டர்கள் யாரும் கலங்க வேண்டாம், கவலைப்பட வேண்டாம். 

 

தேர்தலில் அனைவருக்கும் வெற்றி தோல்வி சஜகம். இந்த வெற்றி தோல்வி என்பது 5 ஆண்டுகள் தான். மக்கள் நம்மை தூக்கி எறிந்தாலும், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், வெற்றியாக இருந்தாலும் தோல்வியாக இருந்தாலும் கேப்டன் விஜயகாந்த் மீண்டும் சுவற்றில் எறிந்த பந்தை போன்று மக்கள் சேவை செய்ய மக்களை தேடி விரைவில் குணமடைந்து வருவார் என்று கண்ணீர் விட்டு அழுதவாறு பேசினார். 

 

அப்போது மேடையில் அமர்ந்திருந்த தேமுதிக நிர்வாகிகள் அவரை அழ வேண்டாம் என்று சமாதானப்படுத்தினர். மேடைக்கு எதிரே அமர்ந்திருந்த தொண்டர்கள் மத்தியில் இந்த கண்ணீர் பேச்சு ஒரு சோகத்தை ஏற்படுத்தியது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயபிரபாகரனுக்கு உற்சாக வரவேற்பு; வெற்றியைத் தேடித்தருமா கேப்டனின் அனுதாப அலை?

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Analysis of Vijaya Prabhakaran's chances of winning

நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக கட்சி அதிமுக, பாஜக கட்சிகளுடன் இறுதிக்கட்ட கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. இறுதியாக தேமுதிக கட்சி அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நிறைவு செய்தது. நடைபெறும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. திருவள்ளூர் தனித் தொகுதி, மத்திய சென்னை, விருதுநகர், கடலூர், தஞ்சாவூர் ஆகிய 5 சீட்கள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டன. இதையடுத்து வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். 

அதில், விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணிக் கட்சி சார்பில் தேமுதிக வேட்பாளராக மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து, வேட்புமனு தாக்கலை நிறைவு செய்த விஜய பிரபாகரன் தான் போட்டியிடும் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். விஜய பிரபாகரனின் பூர்விகம் விருதுநகர். தந்தையும் மறைந்த தேமுதிகவின் தலைவருமான விஜயகாந்த்தின் சொந்த ஊர் விருதுநகர் என்பதால் அங்கு அரசியல் பயணத்தை தொடங்க இருக்கிறார் மண்ணின் மைந்தன்.  விஜயகாந்த் பிறந்த ஊர் விருதுநகர் என்பதால் அங்கு தேமுதிகாவிற்கு எப்போதுமே பேராதரவு இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதுவும் கட்சியின் தலைவரின் அனுதாப அலையாலும், விஜயகாந்தின் மகன் என்பதாலும் விஜய பிரபாகரன் எளிதில் வெற்றி பெறுவார் எனக் கூறப்படுகிறது.

விருதுநகர் மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரை, பாஜக சார்பில்  நடிகை ராதிகா சரத்குமார், தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் போட்டியிடுவதால், அது ஸ்டார் தொகுதியாக மாறியுள்ளது. தற்போது, சிட்டிங் எம்பியான காங்கிரசின் மாணிக்கம் தாகூரே மீண்டும்  விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் களம் காண்கிறார். விருதுநகர் தொகுதி குறித்து தேமுதிகவினர் பேசுகையில், விஜய பிரபாகரன் மண்ணின் மைந்தர். விருதுநகர்தான் அவரின் பூர்விகம். விருதுநகர் மக்களும் விஜய பிரபாகரனை தங்கள் வீட்டு பிள்ளையாக பார்க்கிறார்கள். அதனால் விருதுநகரில் விஜயபிரபாகரன் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. விஜய பிரபாகரன் நீண்ட ஆண்டுகளாக மக்கள் சேவை, அரசியல் பணிகளிலும் ஈடுபட்டு வருபவர். மறைந்த தலைவர் விஜயகாந்த்தின் மகனான விஜய பிரபாகரன், தந்தை எதிர்கொண்ட சவால்களையும் பார்த்து வளர்ந்தவர். சொந்த தொகுதியான விருதுநகர் தொகுதியைச் சிறப்பாக கொண்டு வரவேண்டும் என்பதுதான் அவருடைய ஒரே நோக்கம். இப்போதே விருதுநகரில் தங்கி மக்கள் பணிகளை மேற்கொள்ள விஜய பிரபாகரன் வாடகைக்கு வீடு ஒன்றை பார்த்து வைத்துள்ளார்.

அதிமுக தற்போது கூட்டணி அமைத்து இருப்பதால் இந்த முறை தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகசாமாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்த முறை அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதிமுக முழு ஒத்துழைப்பு வழங்கினால் வெற்றி நிச்சயம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு பிறகு நடைபெறும் தேர்தல் என்பதால் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் தேமுதிக களம் இறங்கியுள்ளது. விருதுநகர் வேட்பாளர் விஜய பிரபாகரன் செல்லும் இடங்களில் எல்லாம் தந்தை வழியில் செயல்படுவேன் என உருக்கமாக பேசி வருகிறார். மேலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, தொடர்ந்து இந்த முறை தேமுதிக விருதுநகரை கைப்பற்ற தேவையான களப்பணிகளை அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.

விருதுநகர் மண்ணின் மைந்தன் விஜய பிரபாகரன் போட்டியிடும் முதல் மக்களவைத் தொகுதியில் வெற்றி வாகை சூடுவாரா? என்பதை ஜூன் 4 ஆம் தேதி தான் தெரியும்.  

Next Story

ஸ்டார் தொகுதியாக மாறிய விருதுநகர்; வாகை சூடுவாரா விஜயபிரபாகரன்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Vijaya Prabhakaran participate Virudhunagar constituency

நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக கட்சி அதிமுக, பாஜக கட்சிகளுடன் இறுதிக்கட்ட கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. இறுதியாக தேமுதிக   அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நிறைவு செய்தது. நடைபெறும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. திருவள்ளூர் தனித் தொகுதி, மத்திய சென்னை, விருதுநகர், கடலூர், தஞ்சாவூர் ஆகிய 5 சீட்கள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டன. இதையடுத்து வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். 

அதில், விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் தேமுதிக வேட்பாளராக மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து, வேட்புமனு தாக்கலை நிறைவு செய்த விஜய பிரபாகரன் தான் போட்டியிடும் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட வருகிறார். விஜய பிரபாகரனின் பூர்விகம் விருதுநகர். தந்தையும் மறைந்த தேமுதிகவின் தலைவருமான விஜயகாந்த்தின் சொந்த ஊர் விருதுநகர் என்பதால் அங்கு அரசியல் பயணத்தை தொடங்க இருக்கிறார் மண்ணின் மைந்தன்.  விஜயகாந்த் பிறந்த ஊர் விருதுநகர் என்பதால் அங்கு தேமுதிகாவிற்கு எப்போதுமே பேராதரவு இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதுவும் கட்சியின் தலைவரின் அனுதாப அலையாலும், விஜயகாந்தின் மகன் என்பதாலும் விஜய பிரபாகரன் எளிதில் வெற்றி பெறுவார் எனக் கூறப்படுகிறது.

விருதுநகர் மக்களவைத் தொகுதியை பொறுத்தவரை பாஜக சார்பில்  நடிகை ராதிகா சரத்குமார், தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் போட்டியிடுவதால் ஸ்டார் தொகுதியாக விருதுநகர் மாறியுள்ளது. தற்போது, சிட்டிங் எம்பியான காங்கிரஸ் மாணிக்கம் தாகூரே மீண்டும்  விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் களம் காண்கிறார். 

விருதுநகர் தொகுதி குறித்து தேமுதிகவினர் பேசுகையில், விஜய பிரபாகரன் மண்ணின் மைந்தர். விருதுநகர்தான் அவரின் பூர்விகம். விருதுநகர் மக்களும் விஜய பிரபாகரனை தங்கள் வீட்டு பிள்ளையாக பார்க்கிறார்கள். அதனால் விருதுநகரில் விஜயபிரபாகரன் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. விஜய பிரபாகரன் நீண்ட ஆண்டுகளாக மக்கள் சேவை, அரசியல் பணிகளிலும் ஈடுபட்டு வருவபர். மறைந்த தலைவர் விஜயகாந்த்தின் மகனான விஜய பிரபாகரன் தந்தை எதிர்கொண்ட சவால்களையும் பார்த்து வளர்ந்தவர். சொந்த தொகுதியான விருதுநகர் தொகுதியை சிறப்பாக கொண்டு வரவேண்டும் என்பதுதான் அவருடைய ஒரே நோக்கம். இப்போதே விருதுநகரில் தங்கி மக்கள் பணிகளை மேற்கொள்ள விஜய பிரபாகரன் வாடகைக்கு வீடு ஒன்றை பார்த்து வைத்துள்ளார். 

அதிமுக தற்போது கூட்டணி அமைத்து இருப்பதால் இந்த முறை தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகசாமாக அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்த முறை அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளர்  விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதிமுக முழு ஒத்துழைப்பு வழங்கினால் வெற்றி நிச்சயம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு பிறகு நடைபெறும் தேர்தல் என்பதால் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் தேமுதிக களம் இறங்கியுள்ளது. 

விருதுநகர் வேட்பாளர் விஜய பிரபாகரன் செல்லும் இடங்களில் கூட தந்தை வழியில் செயல்படுவேன் என உருக்கமாக பேசி வருகிறார். செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, தொடர்ந்து இந்த முறை தேமுதிக விருதுநகரை கைப்பற்ற தேவையான களப்பணிகளை அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர். 

விருதுநகர் மண்ணின் மைந்தன் விஜய பிரபாகரன் போட்டியிடும் முதல் மக்களைத் தொகுதியில் வெற்றி வகையை சூடுவாரா? என்பதை ஜூன் 4 ஆம் தேதி தான் பதில் சொல்லும்.