தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் நாளை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப வாய்ப்பு?

jk

அண்மையில் கரோனா காரணமாக நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பிய நிலையில், மீண்டும் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 6 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

அவரின் உடல்நிலை நல்ல முறையில் இருப்பதாக, நேற்று அக்கட்சியின் சார்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது அவரின் உடல்நிலை நல்ல முறையில் இருப்பதாகவும், அவர் நாளை வீடு திரும்ப வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தே.மு.தி.க கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுதொடர்பான தகவல்கள் தங்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

vijayakanth
இதையும் படியுங்கள்
Subscribe