Advertisment

புதுக்கோட்டை தொகுதிக்கு அடிபோடும் அமைச்சர் விஜயபாஸ்கர்!!!

vijayabaskar

புதுக்கோட்டையில் கடந்த 15 ந் தேதி அமமுக பொதுக்கூட்டத்தைதினகரன்நடத்தினார் அந்தக் கூட்டத்தில் பேசிய தினகரன், புதுக்கோட்டைக்கு ஒரு மருத்துவர் பெருமை சேர்த்தார், இன்னொரு மருத்துவர் அமைச்சராகி மாவட்டத்தின் பெயரை கெடுக்கிறார். என்று கூறினார்,மேலும் பல குற்றச்சாட்டுகளையும் எழுப்பிப் பேசினார்.

Advertisment

அதன் பிறகு திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திலும் அமைச்சர் விஜயபாஸ்கரை இலக்காக வைத்து பேசினார்கள். அதில் இருவர் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக பேசியதாக வழக்கு பதிவுகளும் கைது நடவடிக்கைகள் ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகிறது.

Advertisment

இந்த நிலையில் தான் அதிமுக பொதுக்கூட்டம் சின்னப்பா பூங்காவில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர், அமமுக தினகரன், திமுகவுக்கு எதிராக ஆவேசமாக பேசினார். அதிமுகவினர் எழுச்சியாக உள்ளனர் ஜெயலலிதாவின் ஆத்மா எம் ஜி ஆரின் ஆத்மா நம்மை வழி நடத்தும். வரும் சட்டமன்ற தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றும்அதிமுக கட்சியை தொண்டர்களை விமர்சிக்க ரகுபதிக்கு தகுதி கிடையாது.

ரகுபதியோ திருநாவுக்கரசோ ஆர்எம் வீரப்பனோ அதிமுகவிற்கு ஒரு செங்கற்கல்லைக்கூட எடுத்து போட்டது கிடையாது.மாவட்டத்தின் வளர்ச்சிக்கு எதுவும் செய்தது இல்லை என்னுடன் பொது மேடையில் விவாதம் செய்ய ஸ்டாலினுக்கோ ரகுபதிக்கோ தைரியம் உண்டா... சூடு சொரணை இருந்தால் விவாதத்திற்கு வாருங்கள்...

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

என்னை கொலை செய்ய பகிரங்கமாக ஒருவர் பேசியுள்ளார். அவர் கள்ள சாராயம் காய்ச்சுபவர் அவரை எல்லாம் பேச வைக்கிறார்கள். அவர் நிலைமை எல்லோருக்குமே தெரியும்.அவரை ஜெயிலுக்கு அனுப்பி வைத்து விட்டு ரகுபதி குடும்பத்தோடு ஜாலியாக படம் பார்த்து இருக்கிறார்.28 கோடி அன்னிய செலவானி மோசடி வழக்கில் நான் இந்திய பிரஜை இல்லை வாக்கு மூலம் தந்தவர் டிடிவி டிடிவி ஒரு கட்சி, அவர் தம்பி பாஸ்கரன் ஒரு கட்சி. மாமா திவாகரன் ஒரு கட்சி அதே போல் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ஆகியோருக்குள் புகைச்சல் குடும்பத்தை ஒற்றுமையாக வைக்க முடியவில்லை. அடுத்தவர்களை குறை சொல்ல யோக்கியதை கிடையாது.எதிர்ப்புகளை சமாளிப்பேன் ஒடி ஒளிய மாட்டேன் எங்களை உரசினால் தீ பிடிக்கும் அதிமுக சிங்கத்திற்கு நிகரான கூட்டம்.

நெஞ்சிலே வஞ்சத்தை வைத்துக் கொண்டு விஷத்தை கக்குகிறார் டிடிவி தினகரன். புதுக்கோட்டை தொகுதியில் இடைத்தேர்தலில் என்று தொடங்கி பிறகு திருத்திக் கொண்டு என்னுடன் போட்டியிட்டு ஜெயிக்க தயாரா..? சவால் விட்டு கேட்கிறேன் மணல் கார்த்திகேயனையும் ஓடிப்போன ரத்தினசபாபதியை ஒருபக்கமும் பாதுகாப்புக்காக வைத்து கொண்டு டிடிவி பேசுகிறார். ஜெயலலிதா இருந்தவரை பதுங்கு குழியியில் மறைந்து இருந்தவர் டிடிவி. தடம் மாறாதவர்கள் நாங்கள்.

டிடிவி தினகரன் சசிகலாவின் விசுவாசி அல்ல.. எம்.பி. சசிகலா புஷ்பாவின் விசுவாசி....

கடைசி சொட்டு இரத்தம் இருக்கும் வரை இரட்டை இலைக்கும் அதிமுக விற்கும் விசுவாசமாய் இருப்பேன்.என்று பேசியவிஜயபாஸ்கர் அடிக்கடி தனது விராலிமலை தொகுதியைவிட மாவட்ட தலைநகர் தொகுதியான புதுக்கோட்டை யில் என்னை எதிர்த்து வெற்றி பெற முடியுமா என்று விஜயபாஸ்கர் பேசியிருப்பது வரும் தேர்தலில் விராலிமலையை விட்டு புதுக்கோட்டை தொகுதிக்கு குறிவைக்கிறார்.விஜயபாஸ்கர் என்று ர ர க்களே முனுமுனுத்துச் சென்றனர்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

ammk admk vijayabaskar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe