Advertisment

அமைச்சர் விஜயபாஸ்கர் மீது அவதூறு பரப்பியதாக அமமுக பிரமுகர் மீது குவியும் புகார்கள்; கைது செய்ய விரையும் போலிசார்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் லண்டன் சென்றுள்ளனர். லண்டனில் முதலமைச்சருடன் அமைச்சர் இருப்பது போன்ற படங்கள் வெளியாகி உள்ளது.

Advertisment

a

இந்தப் படங்களை வைத்து சமூக வலைதளங்களில் பல்வேறு மீம்ஸ்கள் போடப்பட்டு வருகிறது. அதே போல தர்மபுரி மாவட்ட அ.ம.மு.க பிரமுகர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் கடந்த இரண்டு நாட்களாக அமைச்சர் லண்டனில் இருக்கும் படத்தை வைத்து முகநூலில் அவதூறாக மீம்ஸ் போட்டு வருகிறார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் கொதித்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில் அறந்தாங்கி நகர கூட்டுறவு சங்க இயக்குநர் பார்த்திபன் தலைமையில் திரண்ட அதி.மு.க இளைஞர்கள் அமைச்சர் விஜயபாஸ்கரின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் விதமாக தொடர்ந்து அவதூறு தகவல்களை பரப்பி வரும் தர்மபுரி மாவட்ட அ.ம.மு.க பிரமுகர் கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரைப் பெற்றுக் கொண்ட போலிசார் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.

அதே போல ஆலங்குடி, புதுக்கோட்டை, இலுப்பூர், அன்னவாசல், பொன்னமராவதி உள்ளிட்ட பல ஊர்களிலும் காவல் நிலையங்களில் கிருஷ்ணமூர்த்தி மீது புகார் கொடுத்துள்ளனர் அ.தி.மு.க பிரமுகர்கள்.

a

இந்த புகார்கள் குறித்து காவல் துறையினர் கைது நடவடிக்கை எடுப்பதா என்பது குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து தனிப்படை போலிசாரை அனுப்பி கைது செய்யவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

chithannavasal lingam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe