Advertisment

 போலீஸ் தடியடி! விஜய் ரசிகர்கள் அதிருப்தி!

விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைப்பெற்றது. விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் இவ்விழாவில் பங்கேற்பதற்கு ரசிகர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

b

எதிர்பார்த்ததை விட அதிகமாக ரசிகர்கள் குவிந்ததால், அந்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அத்திவரதருக்கு பிறகு அதிகமான கூட்டத்தை இங்கேதான் பார்க்கிறேன். இந்த விழாவிற்கு வருவதற்கு எனக்கு 3 மணி நேரம் ஆகியிருக்கிறது. அந்த அளவிற்குகூட்டம் என்று நடிகர் விவேக் இந்த விழாவில் பேசியுள்ளார்.

Advertisment

விழாவிற்கு காலை முதலே ரசிகர்கள் அரங்கத்திற்கு வந்து குவிந்துள்ளனர். மதியத்திற்கு பிறகும் ரசிகர்கள் திரண்டு வந்ததால் அரங்கத்தில் அதற்கு மேல் இடமில்லை என்று அவர்களை போலீசார் திரும்பி போகச்சொல்லியிருக்கிறார்கள். தங்களிடம் இருக்கும் அனுமதி சீட்டை காட்டி திரும்பி போக மறுத்துள்ளனர். நேரம் ஆக, ஆக ஆயிரக்கணக்கான விஜய் ரசிகர்கள் கூடியதால், கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியதால், ரசிகர்கள் நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர்.

இதனால் விழா ஏற்பாட்டாளர்கள் மீது ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

bigil
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe