Vijay T.V.K. Flag will fly for the next 5 years at the venue of maanaadu

Advertisment

விஜய்யின் த.வெ.க. கட்சியின் முதல் மாநில மாநாடு வருகிற 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய போது அதற்கான விளக்கத்தை மாநாட்டில் சொல்வதாக தெரிவித்திருந்தார் விஜய். இதனால் மாநாட்டிற்கு தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. மேலும் கட்சிக் கொள்கையை மாநாட்டில் விஜய் அறிவிக்கவிருப்பதால் அரசியல் வட்டாரத்திலும் பேசு பொருளாக மாறியுள்ளது. அதோடு மாநாட்டுத் திடலில் காமராஜர், பெரியார், அம்பேத்கர் மற்றும் விஜய்யின் கட்டவுட் வைக்கப்பட்டுள்ளது. இது பலரது கவனத்தை ஈர்த்தாலும் சில விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. இதனிடையே த.வெ.க. மாநாட்டிற்கு வருவதற்குத் தமிழக முழுவதும் உள்ள தொண்டர்கள் தயாராகி வருகின்றனர்.

மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கவுள்ள நிலையில் அங்கு வைக்கப்படவுள்ள 100 அடி கொடி கம்பத்தில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ஏற்றுகிறார். அதன்பின் 6 மணிக்கு மேல் தொண்டர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேசவுள்ளார். அதில் கட்சியின் கொள்கை, கோட்பாடுகளையும் அறிவிக்கவுள்ளார். இந்த நிலையில் முதல் மாநாட்டில் நடிகர் விஜய் ஏற்றும் கொடி அடுத்த 5 ஆண்டிற்கு அகற்றக்கூடாது என்று நிலத்தின் உரிமையாளர் மணி என்பவருடன் த.வெ.க. சார்பில் ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.