தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் விஜய், இன்று கட்சியின் கொடியை அறிமுகம் செய்துள்ளார். பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள கொடிக்கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி, பின்பு 'தமிழன் கொடி பறக்குது' எனத் தொடங்கும் கட்சி பாடலையும் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் விஜய்யின் தந்தை சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபாஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.
படங்கள் - எஸ்.பி,சுந்தர்