Advertisment

“சமூகநீதி பார்வை கொண்டவராக அரசியலில் அடியெடுத்து வைக்கிறார் விஜய்” - திருமாவளவன் 

Vijay steps into politics as a visionary of social justice says thirumavalavan

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இயக்குநர் போஸ் வெங்கட் தாயார் இறப்பு குறித்து துக்கம் விசாரிக்க வந்த விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி.க்கு கீரமங்கலம் உள்பட பல இடங்களில் கட்சி நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தனர்.

Advertisment

அறந்தாங்கி நிகழ்வையடுத்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய திருமாவளவன், “நடிகர் விஜய் கட்சியின் முதல் நிகழ்வாக மாநாடு நடக்கிறது. மாநாடு வெற்றி பெற வாழத்துகள். விஜய் அவர்கள் சரியான திசையில் பயணிக்கத் தொடங்கி இருக்கிறார். சமூகநீதி பார்வை கொண்டவராக அரசியலில் அடியெடுத்து வைத்திருக்கும் நடிகர் விஜய் விளிம்புநிலை மக்களுக்காக ஒரு இயக்கத்தைத் தொடங்கி இருக்கிறார் என்று நம்ப முடிகிறது. அவருக்கு என் வாழ்த்துகள்.

Advertisment

திராவிட எதிர்ப்பு கருத்து எழுகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி எதிர்க்கிறார். அது அவர் ஆர்.எஸ்.எஸ் -சில் கற்றுக் கொண்டது. தமிழ்நாட்டில் திமுக - அதிமுக அரை நூற்றாண்டு காலம் ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ளது. இதற்கு எதிராக தோன்றும் கட்சிகள் வெற்றி பெற முடியவில்லை என்று தான் ஏற்க வேண்டிய கசப்பான உண்மை ஆகும். திமுக - அதிமுக வை வீழ்த்த நினைக்கும் சனாதன, சங்பரிவார் திராவிடத்தை எதிர்க்கிறார்கள். திமுக - அதிமுக எதிர்ப்பலை தான் திராவிட எதிர்ப்பாகப் போதிக்கப்படுகிறது. ஆரியத்திற்கு மாற்றுத் திராவிடம்; பெரியாருக்கு முன்பே திராவிடம் வந்துவிட்டது. திராவிடம் இல்லை என்றால் தமிழ் இருந்திருக்காது, சமஸ்கிருதமும் ஆரியமும் விழுங்கி இருக்கும்” என்றார்.

vck Thirumavalavan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe