நடிகர் விஜய், ஏ.ஜி.எஸ், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.

Advertisment

Vijay should not fear IT test threat - KS.azhagiri

நடிகர் விஜய்யின் 'பிகில்' படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று (05/02/2020) காலை முதல் சோதனை நடத்தி வரும் நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிறுவனத்துக்கு சொந்தமான சென்னை தி.நகரில் உள்ள வீடு, தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகம் உள்பட 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

நேற்று நெய்வேலியில் நடைபெற்ற மாஸ்டர் படப்பிடிப்புத்தளத்தில் இருந்து சென்னை அழைத்துவரப்பட்ட நடிகர்விஜயைபனையூரில் உள்ள வீட்டில்வைத்து வருமான வரித்துறைஅதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

Advertisment

இந்நிலையில் தமிழககாங்கிரஸ் கமிட்டிதலைவர் கே.எஸ் அழகிரி, ஐ.டிசோதனைப்போன்ற அச்சுறுத்தலுக்கு இளைஞர்களின் நம்பிக்கை நாயகன் விஜய் அஞ்சக்கூடாது. வருமானவரித்துறைசோதனைமூலம் விஜயின்குரலைஒடுக்கலாம் என பாஜககருதுமேயானால் அது பகல் கனவாக முடியும். நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறைசோதனை நடத்துவது அச்சுறுத்தம் நடவடிக்கையாக இருக்க வாய்ப்புண்டு. வருமானவரி வழக்கு வாபஸ் பெறப்பட்டநிலையில்சிஏஏவுக்கு ஆதரவாகரஜினிகாந்த் பேசியுள்ளார் என அறிக்கையில் கூறியுள்ளார்.