/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vaiko vijay.jpg)
விஜய் நடித்து வெளிவந்துள்ள சர்கார் படத்தில் அதிமுக, திமுக கட்சிகளை பற்றி கடுமையாக விமர்சித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அதிமுக அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் நடவடிக்கை எடுப்போம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் ஈரோட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் இது குறித்து கேள்வி எழுப்பியதற்கு,
‘’நடிகர் விஜய் பண்பானவர். அனைவரிடமும் மதிப்புடன் நடந்துகொள்பவர். அவர் நடித்துள்ள சர்கார் திரைப்படத்தை பார்த்துவிட்டு கருத்து தெரிவிக்கிறேன். மற்றபடி, திரைப்படங்கள் மூலமாக சமுதாய சீர்திருத்த கருத்துகளை சொல்வது வழக்கமான ஒன்றுதான். பராசக்தி, வேலைக்காரி உள்ளிட்ட படங்கள் மூலமாக சீர்திருத்த கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன. நாடகங்கள், திரைப்படங்கள் மூலமாக அரசியல் ரீதியான கருத்துகளை கூறலாம்’’என்று தெரிவித்தார்.
Follow Us