'விஜய் பேசியது சரிதான்' சீமான் ஆதரவு!

அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் பேசிய விஷயங்கள் பெரிய அளவில் வைரலானது.நடிகர் விஜய் பேசியகருத்துக்கள் அரசியல் அரங்கத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'Vijay is right' Seaman support!

இந்த நிலையில் இது தொடர்பாக சீமான் கருத்து தெரிவித்துள்ளார். "மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு தேவை என்பதையே நடிகர் விஜய் தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியது சரிதான். உண்மையான கருத்துக்களை அவர் கூறியுள்ளார். சரியான தலைவர்களை தேர்வு செய்யத் தவறியதால் தவறு நடந்து கொண்டு இருக்கிறது. விஜய் தன்னுடைய ரசிகர் மீது கை வைக்ககூடாது என்று கூறுவதில் என்ன தவறு உள்ளது. இது எம்.ஜி.ஆர் காலந்தொட்டு இருந்து வரும் பழக்கம்தான் " என்றார்.

பேனர் விவகாரத்தில் இளம் பெண் பலியான சம்பவத்தை விதி என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளது பற்றி கருத்து தெரிவித்த சீமான், இதை எப்படி விதி என்று எடுத்துக்கொள்வது, அதிகாரிகள், தனி மனிதர்கள் செய்த தவறின் காரணமாகவே ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இதில் தேவையில்லாத விஷயத்தை திணிக்க வேண்டாம் என்றார். மேலும் விரைவில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நிச்சயம் போட்டியிடுவோம் என்றும், நாளை வேட்பாளர் தேர்வு செய்ய உள்ளதாகவும், 27ம் தேதி வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல் செய்வார் என்றும் தெரிவித்தார்.

actor vijay Naam Tamilar Katchi seeman Support
இதையும் படியுங்கள்
Subscribe