/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a4181.jpg)
வினோத் இயக்கத்தில் வெங்கட் நாராயண தயாரிப்பில் விஜய் நடித்து வரும் படம் ஜனநாயகன். இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் , நரேன், கௌதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜூ உள்ளிட பிரபல நடிகர் பட்டாளம் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. முன்னதாக டைட்டிலுடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பலரது கவனத்தை ஈர்த்தது. அரசியல் கதைகளத்தில் இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. முழுநேர அரசியலுக்கு முன் விஜய்யின் கடைசி படமாக சொல்லப்படும் நிலையில் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.
இப்படம் வருகிற அக்டோபரில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தள்ளிப் போகியுள்ளது. 2026 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. விஜய் பிறந்தநாளான இன்று நள்ளிரவு 12 மணிக்கு, படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் ஜனநாயகன் படத்தின் புதிய போஸ்டரை விஜய் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
#JanaNayaganpic.twitter.com/Sv5q81Q3fl
— Vijay (@actorvijay) June 22, 2025
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)