Vijay people's movement first victory!

Advertisment

புதுக்கோட்டை நகராட்சி 4வது வார்டில் தி.மு.க, அதிமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுடன் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் அதன் மாவட்ட பொறுப்பாளர் முகமது பர்வேஸ் போட்டியிட்டார்.

வாக்கு எண்ணிக்கை முடிவில் விஜய் மக்கள் இயக்கம் முகமது பர்வேஸ் 547 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரையடுத்து திமுக வேட்பாளர் ரமேஷ் 205 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கோமதிசங்கர் 203 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

வெற்றிச் சான்றிதழ் பெற்று வெளியே வந்த முகமது பர்வேஸ் நடிகர் விஜய் படத்துடன் வெற்றிசான்றிதழை காட்டினார். கடந்த ஒரு வருட உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.