Advertisment

கவுண்டமணிக்கு நடிகர் விஜய் நேரில் ஆறுதல்

Vijay pays tribute to Goundamani's wife

பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமான நிலையில் திரை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

நடிகர் கவுண்டமணி கடந்த 1963 ஆம் ஆண்டு சாந்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு செல்வி, சுமித்ரா என் இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கவுண்டமணியின் மனைவி சாந்தி இன்று காலை உயிரிழந்தார். தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. கவுண்டமணியின் மனைவி உயிரிழந்ததற்கு திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் கொடைக்கானலில்நடைபெற்ற 'ஜனநாயகன்' திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய நடிகர் விஜய் தேனாம்பேட்டையில் உள்ள நடிகர் கவுண்டமணியின்இல்லத்திற்கு சென்று அவருடைய மனைவியின் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியதோடு, கவுண்டமணிக்கு ஆறுதல் கூறினார்.

tvk vijay tamil film goundamani
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe