பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது பிறந்த நாள் விழா மற்றும் 62வது குருபூஜை ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று (30.10.2024) நடைபெற்று வருகிறது. அதில் முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மரியாதை செய்தனர்.
இந்த நிலையில் த.வெ.க. தலைவர் விஜய், த.வெ.க.வின் எக்ஸ் தளப் பக்கத்தில், “அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார், இந்திய விடுதலைக்காகக் காத்திரமாகக் களமாடியவர். மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படையை வலுப்படுத்தத் துணை நின்றவர். பாராளுமன்ற, சட்டமன்ற அரசியலில் முத்திரை பதித்த பேச்சுக் கலைப் பேரரசர். சமூக நல்லிணக்கம் பேணியவர். தமிழக அரசியலின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகவும் மாறிய, மகத்தான மனிதரை அவரது குருபூஜைத் திருநாளில் வணங்கி வாழ்த்திப் போற்றுவோம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து தற்போது விஜய் அவரது அலுவலகத்தில் முத்துராமலிங்க தேவரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோவை த.வெ.க.வின் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.