ADVERTISEMENT

விஜய் கட்சி சார்பில் விலையில்லா உணவகம் கூடுதலாக 5 இடங்களில் தொடங்க முடிவு

12:29 PM Feb 14, 2024 | ArunPrakash

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், தன்னுடைய மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை செய்து வந்தார். இந்த நிலையில்தான் அரசியலில் கால் பதிக்கும் வகையில் விஜய் மக்கள் இயக்கத்தை, தமிழக வெற்றி கழகமாக மாற்றி தேர்தல் ஆணையத்தில் கட்சியாக பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். மேலும் தன்னுடைய இலக்கு நாடாளுமன்ற தேர்தல் இல்லை; 2026 சட்ட மன்றத் தேர்தல்தான் என்றும் அறிவித்துள்ளார். விஜய்யின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக தற்போது வரை விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை பகுதியில் விலையில்லா விருந்தகம் அமைத்து ஏழை எளிய மக்களுக்கு நாள்தோறும் காலை உணவாக இட்லி, பொங்கல், வடை என உணவளித்து வருகின்றனர். விஜய் மக்கள் இயக்க வேலூர் மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் ஒன்றிணைந்து இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் 900 ஆவது நாளான இன்றும் 200 க்கும் மேற்பட்டவருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக அறிவித்துள்ள நிலையில், விலையில்லா விருந்தகம் இன்னும் கூடுதலாக 5 இடங்களில் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மாவட்டத் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT