Advertisment

இரண்டாம் கட்டமாக மாணவர்களை சந்திக்கும் விஜய்

Vijay to meet students in second phase

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை அழைத்து நடிகர் விஜய் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பில் பாராட்டி நிதியுதவி அளித்து வருவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 முறை மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இத்தகைய சூழலில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு 10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியிருந்தது. இதையடுத்து இந்த ஆண்டும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து கல்வி விருது வழங்கினார்.

Advertisment

அதன்படி முதற்கட்டமாக 80 தொகுதிகளைச் சேர்ந்த முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கடந்த 30.05.2025 அன்று சந்தித்துப் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை இரண்டாம் கட்டமாக நடிகர் விஜய் நேரில் சந்தித்து கல்வி விருது வழங்க இருக்கிறார்.

Advertisment
tamizhaga vetri kazhagam tvk vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe