Vijay to meet students in person again

தமிழகம் மற்றும் புதுச்சேரியில்10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை அழைத்து நடிகர் விஜய் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பில் பாராட்டுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது.

Advertisment

கடந்த இரண்டு முறை மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கப்பட்டதோடு மாணவர்கள் மற்றும் உடன் வரும் பெற்றோர்களுக்கு விருந்து உணவும் வழங்கப்பட்டது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இந்த ஆண்டும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில்10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து கல்வி விருது வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment

முதற்கட்டமாக 80 தொகுதிகளைச் சேர்ந்த முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களை சந்தித்துப் பாராட்டு வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வரும் 30ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.