Advertisment

“பணத்துக்கு பதவிகள் விற்கப்படுகிறது”- விஜய் மக்கள் இயக்கத்தில் சலசலப்பு

வேலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவராக 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பவர் வேல்முருகன். இவருடன் இணைந்து விஜய்யின் மக்கள் இயக்கத்தின் பணிகளை செய்துவந்தவர் சதிஷ்குமார்.

Advertisment

vijay bigil

இந்நிலையில் அக்டோபர் 4ந்தேதி வேலூரில் தனது ஆதரவாளர்கள், நண்பர்களுடன் கோட்டை அருகே கூடி விஜய் மக்கள் இயக்கத்தின் வேலூர் மாவட்ட தலைவராக உள்ள வேல்முருகன் குறித்து குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

Advertisment

மூன்று மாதத்துக்கு ஒருமுறை மாவட்டத்தின் அடுத்தக்கட்ட நிர்வாகிகளை மாற்றுகிறார். ஒருவருக்கு பதவி தந்தால் அடுத்த 6 மாதத்தில், 1 வருடத்தில் நீக்கி இவரே புதியதாக ஒருவரை நியமனம் செய்கிறார். பணத்துக்கு பதவிகள் விற்கப்படுகிறது.

ஒருவரே எத்தனை ஆண்டுகள் மாவட்ட பதவியில் இருப்பார். அரசியல் கட்சிகளை பார்த்து அப்பா முதல்வர், மகன் அமைச்சரா எனக்கேட்கிறோம். விஜய்யின் மக்கள் இயக்கத்தில் அப்படி இருக்கலாமா?, தளபதி விஜய் இதனை கவனிக்க வேண்டும்.

தளபதி விஜய், மரம் நடச்சொல்கிறார், ரத்ததானம் செய்யச்சொல்கிறார். அவருக்காக எவ்வளவு வேண்டுமானாலும் பொது நிகழ்ச்சிக்கு செலவு செய்கிறோம். இயக்க நிர்வாகிகளுக்கு எதற்கு செலவு செய்ய வேண்டும். லட்ச லட்சமாய் செலவாகிறது என வெளிப்படையாக ரசிகர்கள் முன்னால் பேசிய வீடியோ சமூக வளைத்தளங்களில் பரவி வேலூர் விஜய் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

actor vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe