Vijay makkal iyakkam dissolved ? -Actor Vijay's reply!

தனது பெயரைப் பயன்படுத்தி கூட்டங்கள் நடத்த தந்தை சந்திரசேகர், தாய்சோபனாஉள்ளிட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்குத் தடைவிதிக்க வேண்டும் என நடிகர் விஜய் தரப்பு சென்னை உரிமையியல் நீதிமன்றம் வழக்குத் தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் 'விஜய் மக்கள் இயக்கம்' கலைக்கப்பட்டுவிட்டதாகவிஜயின்தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

Advertisment

அந்த பதில் மனுவில், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தைக் கலைக்கவிருப்பதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும், எனவே விஜய் மக்கள் இயக்கம் தற்பொழுது இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கு விசாரணை வரும்அக்.29 ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்எஸ்.ஏ.சந்திரசேகர் உருவாக்கிய விஜய் மக்கள் இயக்கம் மட்டுமே கலைக்கப்பட்டுள்ளது. தன்னுடைய தலைமையில் இயங்கும் விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்படவில்லை. தன்னுடைய தலைமையிலான விஜய் மக்கள் இயக்கம் இயங்கும் என விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment