Advertisment

பனையூரில் கூடும் விஜய் மக்கள் இயக்கத்தினர்!

Vijay makkal iyakam gathered in Panayur!

Advertisment

தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில்அனைத்து மாவட்டங்களிலும் திமுக அமோக வெற்றிபெற்ற நிலையில், இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்டவர்களும் வென்றிருந்தனர். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறுஇடங்களுக்குப்போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், 115 இடங்களில் வெற்றிபெற்றனர்.ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட குழு உறுப்பினருக்கான மறைமுகத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில்15க்கும்மேற்பட்ட நிர்வாகிகள் போட்டியிட்டும் ஒருவர் கூட வெற்றிபெற முடியாத நிலையே இருந்தது.

ஊரகஉள்ளாட்சித்தேர்தலில் வெற்றிபெற்றவர்களைஇன்று (25.10.2021) மாலை 5 மணிக்கு நடிகர் விஜய் சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் சந்திக்கஇருப்பதாகத்தகவல் வெளியான நிலையில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித்தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் மட்டுமல்லாது வேறு சில மாவட்டங்களில் நடைபெற்றஉள்ளாட்சித்தேர்தலில் வெற்றிபெற்றவர்களும் பனையூர் அலுவலகத்தில் குவிந்துவருகின்றனர்.

local election actor vijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe