Advertisment

இறுதி வரை இழுபறி; சந்திப்பு இடத்தை உறுதி செய்த தவெக

Vijay going to Parantur; Sudden change in meeting place

வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் போராட்டக் குழுவினரை சந்திக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

Advertisment

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேநேரம் தொடர்ச்சியாக அரசு சார்பில் நிலம் எடுக்கும் பணிகள் ஆகியவற்றுக்கான உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் போராட்டக் குழுவினரை தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக விஜய் போராட்டக்காரர்களை வரும் 20/01/2025 ஆம் தேதி சந்திக்க அனுமதி வழங்கி காஞ்சிபுரம் காவல்துறை அனுமதி அளித்துள்ளது. முன்பாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போராட்டக்காரர்களை சந்திக்க அனுமதிகேட்டு மனு கொடுக்கப்பட்ட நிலையில் காவல்துறை அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில் தவெக தலைவர் விஜய் எகனாபுரம் அம்பேத்கர் திடலில் போராட்டக்குழுவினர் மற்றும் மக்களுடன் சந்திப்பு மேற்கொள்ள திட்டமிடல்களை கட்சியினர் ஏற்பாடு செய்து வந்தனர். காவல்துறையிடமும் அனுமதி கேட்டிருந்தனர். முன்னதாக பரந்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் விஜய் போராட்டக்குழுவினரை சந்திக்க திட்டமிடப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது எகனாபுரம் அம்பேத்கர் திடலில் போராட்டக் குழுவினரரை விஜய் காலை 11 மணிக்கு சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் திடலில் கேரவனில் இருந்தபடியே விஜய் உரையாற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

paranthur police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe