Advertisment

முதல் மாநாட்டில் சிறப்பு பரிசு; விஜய்யிடம் இருந்து வந்த உத்தரவு!

Vijay gives special prize conference to executives who recruit most members to  party

தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கி நடத்தி வரும் விஜய் தொடர்ந்து அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி அண்மையில் பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் கட்சிக்கான பாடலும் வெளியிடப்பட்டிருந்தது. சிகப்பு, மஞ்சள் நிறத்தில் இருந்த கொடியின் மத்தியில் யானைகள் வாகைப்பூ, 28 நட்சத்திரங்கள் எனப் பல அடையாளங்களும், குறியீடுகளும் இடம்பெற்றிருந்தன.

Advertisment

கொடிக்கான விளக்கத்தை விரைவில் நடைபெற இருக்கும் மாநாட்டில் தெரிவிப்போம் அதுவரை கட்சியினர் கட்சிக் கொடியை முறையாக அனுமதி பெற்று ஏற்றிக் கொண்டாடுங்கள் என விஜய் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு செப்டம்பர் 23ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான அக்கட்சியினர், "செப்டம்பர் 23ஆம் தேதி வி.சாலையில் கிராமத்தில் மாநாடு நடத்த தங்களுக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். அதேசமயம் மாநாட்டிற்கான பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Advertisment

இதற்கிடையே கட்சியில் உறுப்பினர் சேர்க்கையும் படு தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் கட்சி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தும் வகையில் த.வெ.க தலைமை ஒரு அவசர உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த உத்தரவில், கட்சியில் அதிக உறுப்பினர்களைச் சேர்க்கும் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு விக்கிரவாண்டியில் நடக்கும் முதல் மாநாட்டில் விஜய் சிறப்புப் பரிசு வழங்குவார் என்று கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, உறுப்பினர் சேர்கையில் மாவட்டச் செயலாளர்களும் நிர்வாகிகளும் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

Vikkiravandi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe