பிகில் படத்தில் வாங்கிய சம்பள விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் வீடுகளில் இரண்டு நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

Vijay fans condemning Arjun sampath via poster

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இது குறித்து இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், ’’சினிமா துறையினர் திரைப்படங்களில் மட்டும் தங்களை நல்லவர்களாகக் காட்டிக்கொண்டு பஞ்ச் டயலாக் பேசுகிறார்கள். உண்மையில் விஜய் வருமான வரி ஏய்ப்பு செய்கிறார்கள். பேசுவது பஞ்ச் டயலாக்.. செய்வது வரி ஏய்ப்பு என்று பத்திரிகைகள் இடம் பேசினார்.

Vijay fans condemning Arjun sampath via poster

அர்ஜுன் சம்பத்தின் இந்த பேச்சு குறித்து விஜய் ரசிகர்களிடையே பெரிய எதிர்ப்பை கிளப்பியுள்ளது. அர்ஜுன் சம்பத்துக்கு எதிராக விஜய் ரசிகர்கள் எச்சரிக்கை விடுத்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். திருச்சியில் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா அருகில் சம்பத்துக்கு எச்சரிக்கை விடுத்து விஜய் குறித்து பேசிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்து திருச்சி மாநகர் முழுவதும் போஸ்டர் ஒட்டி உள்ளார்.

இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அர்ஜுன் சம்பத் விஜய்க்கு எதிராகவும்,நடிகர் ரஜினிக்கு ஆதரவாகவும் பேசியிருப்பதால் தற்போது விஜய் ரசிகர்களை போராட்டக்களத்தில் குதித்துள்ளனர்.