Skip to main content

விஜய் ரசிகர்கள் 31 பேர் மீது வழக்குப்பதிவு

Published on 09/11/2018 | Edited on 09/11/2018
v

 

சர்கார் படத்திர்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில்,  திருவாரூரில் அனுமதியின்றி சர்கார் திரைப்பட பேனர் வைத்ததாக விஜய் ரசிகர்கள் 21 பேர் மீது திருவாரூர் போலீசார்  வழக்கு பதிவு செய்துள்ளனர்.      

 

இதே போல் கரூரிலும் அனுமதியின்றி சர்கார் பேனர் வைத்ததாக விஜய் ரசிகரள் 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.   

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக வெற்றிக் கழகம் நாளை முக்கிய ஆலோசனை!

Published on 18/02/2024 | Edited on 18/02/2024
Tamilaga Vettri Kazhagam important meeting tomorrow

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், தன்னுடைய மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை செய்து வந்தார். இந்த நிலையில்தான் அரசியலில் கால் பதிக்கும் வகையில் விஜய் மக்கள் இயக்கத்தை, தமிழக வெற்றிக் கழகமாக மாற்றி தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியாக பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல்தான் தன்னுடைய இலக்கு என்றும் தெரிவித்திருந்தார். விஜய்யின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறி தற்போது வரை விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உத்தரவின் பேரில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் நாளை (19.02.2024) காலை 9.00 மணி அளவில் நடைபெற உள்ளது. எனவே கட்சியின் மாவட்டத் தலைமை நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

அனல் பறக்கும் வசனங்கள்; அரசியலுக்கு அழைத்த ரசிகர்கள் - விஜய் பிறந்தநாள் போஸ்டர்கள்

Published on 22/06/2023 | Edited on 22/06/2023

 

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கக்கூடிய கதாநாயகனாக வலம் வரும் விஜய் தனது 49வது பிறந்தநாளை இன்று (22.06.2023) கொண்டாடி வருகிறார்.

 

இதையொட்டி ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் சினிமாவை தாண்டி, விஜய் மக்கள் இயக்கம் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் விஜய், அண்மையில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். இந்த செயல் அரசியல் வட்டாரத்திலும் பேசுபொருளாக மாற, அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் பிறந்தநாள் வாழ்த்தோடு சேர்த்து அரசியல் வருகை குறித்தும் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். குறிப்பாக அதில் இடம்பெற்றுள்ள வசனங்கள் பலரது கவனத்தை ஈர்த்து வருகின்றன. அதில் சில போஸ்டர்களின் வசனங்கள் பின்வருமாறு...

 

மதுரை புறநகர் வடக்கு மாவட்ட மாணவரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள ஒரு போஸ்டரில், ‘தளபதியே! முடியட்டும் திராவிட ஆட்சி; உந்தன் தலைமையில் மலரட்டும் மக்களாட்சி’

 

மதுரை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் ‘அன்று முயற்சி செய்தால் தலைசிறந்த நடிகர், இன்று முடிவு எடுத்தால் தமிழ்நாட்டிற்கே நாளைய முதல்வர்’ என இருக்கிறது. 

 

மதுரை: இன்று 234 தொகுதியைச் சேர்ந்த மாணவர்கள் உங்களைத் தேடி கல்வித் திருவிழாவில்!! நாளை 234 தொகுதியை சேர்ந்த மக்களும் வாக்களிக்க உங்களுக்காக வா தலைவா!! முதலமைச்சர்

 

பாளையங்கோட்டை: மேற்கே மறைந்த சூரியன் கிழக்கே உதித்தே தீரும் 

 

நெல்லை: ‘மாணவர்கள் நினைத்தால் மாற்றம் வரும். நீங்கள் முடிவெடுத்தால் 2026 - 234 தொகுதிகளிலும் ஏழைகளுக்கு ஏற்றம் வரும்’ என்றும், ‘எங்கள் ஓட்டுக்கு value வேண்டும், அதுக்கு எங்கள் தலைவர் (விஜய்) களத்தில் நிற்க வேண்டும்’

 

திருச்சி: தமிழகம் போற்றும் வரலாறே! மாநிலங்கள் வியக்கும் மகத்துவமே! எதிர்கால தமிழக சட்டமன்ற ஆளுமையே!

 

உசிலம்பட்டி: ஜூன் 22-ல் பிறந்தநாள் காணும் நாங்கள் வணங்கும் தலைவா… நாளைய தமிழகத்தின் முதல்வா...