/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/23_155.jpg)
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி வரும் 2026 -ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் பலர் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகிற 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது.
மாநாட்டிற்கான ஏற்பாடுகளைக் கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அங்கிருந்தபடியே செய்து வருகிறார். மாநாட்டில் பங்கேற்பதற்காகத் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து தமிழக வெற்றிக்கழகத்தினர் தயாராகி வருகின்றனர். இவர்களுடன் விஜய் ரசிகர்களும் மாநாட்டில் கலந்து கொள்ள ஆர்வமாக இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுத்தூரை சேர்ந்த ஹரிஹரசுதன்(36) என்பவர் தீவிர விஜய் ரசிகராவார். இவர் வருகிற 27ஆம் தேதி விக்ரவாண்டியில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்பதற்காக சத்தியமங்கலத்தில் இருந்து விக்கிரவாண்டிக்கு நடந்தே செல்ல தீர்மானித்து நேற்று(23.10.2024) மதியம் முதல் தனது நடைப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். 310 கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்த செல்ல திட்டமிட்டுள்ள ஹரிஹரசுதன் தனது பையன் பின்பகுதியில் தமிழக வெற்றிக்கழக கொடியை வைத்து நடைப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)