/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vijay pondychery.jpg)
புதுச்சேரியில் நடிகர் விஜய் பங்கேற்ற திருமண விழாவில் ரசிகர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. நாற்காலிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vijay pondychery3.jpg)
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்சி ஆனந்த். இவர் புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவரது மகள் அங்காள பரமேஸ்வரி திருமணத்தின் வரவேற்பு நிகழ்வு புதுச்சேரி - திண்டிவனம் சாலையில் உள்ள மதுரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் வந்து மணமக்களை வாழ்த்தினார்.
விஜய்யின் வருகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் அவரது ரசிகர்கள் கட் -அவுட், போஸ்டர்கள் வைத்து பரபரப்பை ஏற்பட்டுத்தினர். விஜய்யை பார்க்கும் ஆவலில் திருமண மண்டபத்திற்குள் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். மண்டபத்திற்கு வெளியே பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. ஆனாலும் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை இருந்தது. மிகுந்த போராட்டத்திற்கு பின்னர்தான் விஜய் மண்டபத்திற்கு உள்ளே சென்றார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vijay vijay.jpg)
விஜய்யை பார்க்கும் ஆவலில் ரசிகர்கள் எல்லோரும் நாற்காலியின் மேல் ஏறி நிற்க முற்பட்டனர். ரசிகர்கள் பலரும் செல்போனில் விஜய்யை படம் பிடித்தனர். சிலர் செல்பி எடுக்க முயன்றனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு ரசிகர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. நாற்காலிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் பதற்றம் நிலவியது. நிலைமையை உணர்ந்து மணமக்களை வாழ்த்திய விஜய் உடனடியாக மண்டபத்தை விட்டு வெளியேறினார். பின்னர் கூட்டம் கலைந்து சென்றதால் பதற்றம் நீங்கியது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vijay pondy.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vijay sankamithra.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vijay pondichery 2_0.jpg)
Follow Us