Vijay entering politics is good says parivendhar

விஜய் அரசியலுக்கு வருவது நல்லதுதான் ஏற்கனவே பதவியில் இருப்பவர்கள் வருவதை விட, புதியவர்கள் வருகையால் மக்களுக்கு நல்லது நடக்கும் என ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

Advertisment

கரூர் மாநகரில் இந்திய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் சித்ரா என்பவரின் இல்ல திருமண விழாவில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.விழாவை முடித்துக் கொண்டு புறப்பட்ட அவரிடம் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

Advertisment

அதற்கு, “விஜய் அரசியலுக்கு வருவது நல்லதுதான். மக்கள் நல்லது நடக்குமா என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே பதவியில் இருந்தவர்களே வருவதை விடவும், நல்லவர்கள், சாமர்த்தியமானவர்கள், தேசப்பற்றுடன் இருப்பவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பவர்கள் கண்டிப்பாக வரவேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நல்லது நடக்கும்” என்று பதிலளித்தார்.