/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a2210.jpg)
நடிகரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுகவினர் மற்றும் எம்ஜிஆர் ரசிகர்கள் இன்று கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் எம்ஜிஆரை போற்றும் விதமாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள பதிவில், 'அளவற்ற வறுமையைத் தாண்டினார் .கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார். அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார். அவரே தமிழக அரசியலின் அதிசயம் ஆனார். இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப் பிறந்தநாள் வணக்கம்' என தெரிவித்துள்ளார்.
Follow Us