கடவுள் இயேசு கிறித்துவின் பிறப்பைக் குறிக்கும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையோட்டில் குடியரசுத் தலைவர், பிரதமர், அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய் மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், “இயேசு கிறிஸ்து பிறந்த இந்த நன்னாளில் அனைவரது இல்லங்களிலும் அன்பு, கருணை, மகிழ்ச்சி, சமாதானம் நிலைத்து நீடித்திருக்கட்டும். அனைவருக்கும் என் அன்பான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.