Vijay came out after party announcement; Cheering fans

விஜய், தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தமிழக வெற்றி கழகம் என தனது கட்சிக்கு பெயர் வைத்துள்ளதாக அறிவித்த விஜய், அதை இந்தியத் தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். கட்சியின் பெயரை அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.

Advertisment

இதனிடையே கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிட்ட விஜய், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள ஒரு படத்தில் நடித்துவிட்டு முழுமையாக கட்சிப் பணிகளை கவனிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க, விஜய்க்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற GOAT திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஜய் வெளியே வந்த பொழுது ரசிகர்கள் அவரை நோக்கி 'தளபதி... தளபதி...' என கத்தினர். நடிகர் விஜய்யும் திரும்ப கைகளை உயர்த்தி காட்டி விட்டு காரில் சென்றார். கட்சி அறிவிப்பு பிறகு நடிகர் விஜய்யை நேரில் பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.