ramadas

Advertisment

அண்மையில் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து சன் பிக்ச்சர் நிறுவனம் தயாரிக்கும் திரைபடம் ''சர்க்கார்''. இந்ததிரைப்படம் சம்பந்தமான பார்ஸ்ட் லுக்கில் நடிகர் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற போஸ்டர் வெளியாகியுள்ளது. இதை எதிர்த்து பாமக அன்புமணி ராமதாஸ் ஏற்கனவேகண்டனம் தெரிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து நேற்று கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் பாமக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட ராமதாஸ் சன் பிக்ச்சர் நிறுவனமும் நடிகர்விஜய்யும் சிகரெட் நிறுவனத்திடம் கோடி கோடியாகபணம் பெற்றுக்கொண்டு இவ்வாறு செய்துள்ளனர் என குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், அந்த போஸ்டரை பார்த்தவுடன் தனக்கு அதிக ஆத்திரம் வந்தது.நான் மட்டும் பழைய ராமதாஸாக இருந்தால் என் கட்சி தொண்டர்களுக்கு அந்த திரைப்படம் எந்த தியேட்டரிலும்ஓடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள் என கேட்டிருப்பேன். ஆனால் தற்போது நடிகர் விஜய்யிடமும்,சன் பிக்ச்சரிடமும் புகைக்கும் காட்சி இருந்தால் நீக்கவேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறினார்.