Advertisment

விஜய், அஜித் ரசிகர்கள் மோதல்... அஜித் ரசிகருக்கு அரிவாள் வெட்டு!

சமீபமாக நடிகர் விஜய் ரசிகர்களும்நடிகர்அஜித் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் மோதலில் ஈடுப்பட்டுவரும் நிலையில், தற்போது இந்தவாய் வார்த்தை மோதல்கைகலப்பாக மாறி அரிவாள் வெட்டு வரை சென்று, அரிவாள் வெட்டு சம்பவத்தில் ஈடுபட்டவிஜய் ரசிகர் ஒருவர்புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Advertisment

 Vijay, Ajith fans clash ...

சென்னையில்புழல்பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் நடிகர் விஜய்யை தரக்குறைவாகவிமர்சித்த அஜித் ரசிகரை அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். புழல் பகுதியில் வசித்து வரும் தீவிர விஜய் ரசிகரான ரோஷன் மற்றும் தீவிர அஜித் ரசிகரான உமா ஷங்கர், இருவரும் மாறி மாறி நடிகர்களை தரக்குறைவாக பேசியதாக கூறப்பட்டது.

Advertisment

அப்போது ஆத்திரமடைந்த ரோ‌ஷன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் உமா சங்கரை வெட்டியுள்ளார். இதனால் காயமடைந்தஉமாசங்கரை முகாமில் இருந்தவர்கள் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் ரோஷன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

actor vijay ajith Clash police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe