விஜய் பட விழாவுக்கு அனுமதி கொடுத்தது ஏன்? கல்லூரியிடம் விளக்கம் கேட்கும் உயர்கல்வித்துறை

நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னை தாம்பரத்தில் உள்ள சாய்ராம் தனியார் கல்லூரியில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் பேசியநடிகர் விஜய், அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார்.

வ்

பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ விவகாரம் குறித்து பேசிய அவர், ஆட்சியாளர்களுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தார். என் ரசிகன் மீது கை வைக்காதீர்கள் என்று எச்சரிக்கையும் விடுத்தார். விஜய்யின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு அமைச்சர்கள் பலரும் பதிலடி கொடுத்து வந்தனர்.

இந்நிலையில், திரைப்பட விழாவிற்கு எந்த அடிப்படையில் அனுமதி அளித்தீர்கள் என்று சாய்ராம் கல்லூரியிடம் விளக்கம் கேட்டுள்ளது உயர்கல்வித்துறை.

vijay
இதையும் படியுங்கள்
Subscribe