Skip to main content

 போலீஸ் தடியடி! விஜய் ரசிகர்கள் அதிருப்தி!

Published on 20/09/2019 | Edited on 20/09/2019

 

விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைப்பெற்றது.    விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் இவ்விழாவில் பங்கேற்பதற்கு ரசிகர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

 

b

 

எதிர்பார்த்ததை விட அதிகமாக ரசிகர்கள் குவிந்ததால்,  அந்த பகுதியில்  போக்குவரத்து ஸ்தம்பித்தது. அத்திவரதருக்கு பிறகு அதிகமான கூட்டத்தை இங்கேதான் பார்க்கிறேன்.  இந்த விழாவிற்கு வருவதற்கு எனக்கு 3 மணி நேரம் ஆகியிருக்கிறது.  அந்த அளவிற்குகூட்டம் என்று நடிகர் விவேக் இந்த விழாவில் பேசியுள்ளார்.

 

விழாவிற்கு காலை முதலே ரசிகர்கள் அரங்கத்திற்கு வந்து குவிந்துள்ளனர்.  மதியத்திற்கு பிறகும் ரசிகர்கள் திரண்டு வந்ததால் அரங்கத்தில் அதற்கு மேல் இடமில்லை என்று அவர்களை போலீசார் திரும்பி போகச்சொல்லியிருக்கிறார்கள்.   தங்களிடம் இருக்கும் அனுமதி சீட்டை காட்டி திரும்பி போக மறுத்துள்ளனர்.  நேரம் ஆக, ஆக ஆயிரக்கணக்கான விஜய் ரசிகர்கள் கூடியதால், கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியதால், ரசிகர்கள் நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர்.  

 

இதனால் விழா ஏற்பாட்டாளர்கள் மீது ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

"செஞ்சுட்டா போச்சு..." ராயப்பனை கையிலெடுத்த அட்லீ

Published on 26/05/2022 | Edited on 26/05/2022

 

atlee directing new film bigil rayappan story

 

'ராஜாராணி' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இயக்குநர் அட்லீ, நடிகர் விஜய்யை வைத்து 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்தார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான பிகில் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றதோடு, அதில் வரும் ராயப்பன் கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 

 

இந்நிலையில் பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் ப்ரைம் தனது ட்விட்டர் பக்கத்தில் பிகில் படத்தில் வரும் ராயப்பன் காட்சியை பகிர்ந்து முழு திரைப்படமும் ராயப்பனை மையமாக வைத்து எடுக்கப்பட்டால் எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள் என்று குறிப்பிட்டிருந்தது. இந்த பதிவை பார்த்த இயக்குநர் அட்லீ "செஞ்சிட்டா போச்சு" என ரீட்வீட் செய்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் தற்போது பெரும் உற்சாகத்தில் உள்ளனர். அட்லீ தற்போது ஷாருக்கான் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் பணியை முடித்த பிறகு விஜய்யை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்கவுள்ளார். ஒரு வேலை அந்த படம் ராயப்பனை பற்றிய படமா அல்லது வேறு ஒரு புதிய படத்தில் ராயப்பன் கதையை இயக்கவுள்ளாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

 

 

Next Story

'பிகில்' திரைப்பட பாடகி சங்கீதா சஜித் காலமானார்!

Published on 23/05/2022 | Edited on 23/05/2022

 

 Playback singer Sangeetha Sajid passes away

 

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர்  பின்னணி பாடகி பாடகி சங்கீதா சஜித்.  சிறுநீரக பாதிப்பு தொடர்பாக சிகிச்சை பெற்றுவந்த சங்கீதா சஜித் திருவனந்தபுரத்தில் அவரது சகோதரியுடன் வசித்து வந்த நிலையில் இன்று காலமானர். இன்று மாலை திருவனந்தபுரத்தில் அவரது இறுதி சடங்குகள் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

1996 ஆம் ஆண்டு வெளியான 'மிஸ்டர் ரோமியோ' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியாகி ஹிட் அடித்த 'தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை' என்ற பாடலை சங்கீதா சஜித் பாடியுள்ளார். அதேபோல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'பிகில்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'வெறித்தனம்' பாடலிலும் இன்ட்ரோ போர்ஷனை அவர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.