publive-image

விசாரணை கைதி விக்னேஷ் மரண வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற உத்தரவிடாததைக் கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

Advertisment

சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "விக்னேஷ் உயிரிழந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டால் தான் நேர்மையாக நடைபெறும். வழக்கு நேர்மையாக, நியாயமாக நடைபெற வேண்டும் என்றால் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும். கொலை வழக்காகப் பதிவு செய்யப்படும் என முதல்வரே கூறிய பின் இந்த வழக்கை காவல்துறை வசம் ஒப்படைத்தால் விசாரணை முறையாக நடக்காது.

Advertisment

அரசியல் காழ்ப்புணர்ச்சிக் காரணமாக, தருமபுரம் ஆதீனம் பட்டினப் பிரவேஷம் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்மை மாநிலங்களில் இருந்து போதைப்பொருட்கள் அதிகளவில் தமிழகத்திற்கு கடத்தி வரப்படுகின்றன. தருமபுர ஆதீன எல்லைக்குள் நடைபெறுவதால் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரம் இல்லை. முதலமைச்சர் அனைவருக்கும் பொதுவானவராக செயல்பட வேண்டும்; ஆன்மீகத்தில் அரசு தலையிடுவது ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது" எனத் தெரிவித்தார்.