புதுக்கோட்டை மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தில் எந்த திட்டமானாலும் கையூட்டு கொடுக்க வேண்டியுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அடுத்தடுத்து புகார்கள் வந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை அலுவலகம் முடியும் நேரத்தில் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்திற்குள் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் ரேவதி அறையில் கணக்கில் வராத ரூ. 2 லட்சம் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியுள்ள நிலையில் இது கைச்செலவுக்கான பணம் என்று கூறியுள்ளார். கைச்செலவுக்கு யார் 2 லட்ச ரூபாய் வைத்திருப்பார்கள்? இந்த பணத்திற்கான கணக்குகளை காட்டுங்கள் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை செய்துள்ளனர்.