சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை... கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாய் பணம் பறிமுதல்!  

vigilance officers raid at tamilnadu check post seizures money

வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரால் தமிழகத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, தமிழக- கேரள எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் ஆந்திர எல்லையான திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை, திருத்தணி சோதனைச் சாவடிகளிலும், புதுச்சேரி எல்லையான விழுப்புரம் மாவட்டம், ஒழுந்தியாப்பட்டு சோதனைச் சாவடியிலும், தென்காசி மாவட்டம் புளியரை, தேனி உள்ளிட்ட இடங்களில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனையில் கோவை மாவட்டம், கோபாலபுரத்தில் உள்ள சோதனைச் சாவடியில் கணக்கில் வராத ரூபாய் 50,150, கிருஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் ரூபாய் 94,000, சேர்காடு சோதனைச் சாவடியில் ரூபாய் 40,000, ஒழுந்தியாப்பட்டு சோதனைச் சாவடியில் ரூபாய் 16,000- யும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

money raid vigilance officers
இதையும் படியுங்கள்
Subscribe