ஆண்டு கடந்தும் விடாத விஜிலென்ஸ்... அரண்டுபோன வாணியம்பாடி அதிகாரிகள்...

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த 2015-16ம் ஆண்டு அசோகன் என்பவர் வட்டார போக்குவரத்து அலுவலராக பணியாற்றினார். அப்போது லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றி எடுத்து சென்றனர். விசாரணை நிலுவையில் இருந்து வந்தது.

அசோகன் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் வரும் 30ம் தேதி ஒய்வு பெற உள்ளார்.

Vigilance that is not over the year...

இந்நிலையில் வேலூர் மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் குழு இணைந்து, ஒசூர் வட்டார போக்குவரத்து அலுவலர் அசோகனை வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அழைத்து வந்து பழைய வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் இருந்த இடைத்தரகர்கள் தாங்கள் வைத்துள்ள ஜெராக்ஸ் கடை, பேப்பர் கடைகளை மூடி விட்டு பயந்துப்போய் ஓடிவிட்டனர். அலுவலகத்தை அதிகாரிகள் மூடிவிட்டதால் பொதுமக்களும் திரும்பி சென்றுவிட்டனர்.

அதிகாரி அசோகன் ஒய்வு பெற 20 நாட்கள் இருக்கும் நிலையில் பழைய வழக்கு அதிகாரிகள் மீண்டும் விசாரணை தீவிரப்படுத்துவதால் சமந்தப்பட்ட அதிகாரியோடு அந்த அலுவலகத்தில் உள்ள மற்ற ஊழியர்கலும் கலகத்தில் உள்ளனர்.

அசோகன் வாணியம்பாடியில் பணியாற்றியபோது, வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏவும், தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான நிலோபர்கபில் க்கு அந்த அதிகாரி வேண்டப்பட்டவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

velore vigilance officers
இதையும் படியுங்கள்
Subscribe