Advertisment

"லஞ்சம் வாங்கும்போது கூச்சப்படுவதில்லை"- உயர்நீதிமன்றக் கிளை நீதிபதி!

vigilance department madurai highcourt bench judge

பட்டுக்கோட்டையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் கலைச்செல்வி ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

Advertisment

இந்த மனு இன்று (15/09/2021) நீதிபதி புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கும்போது கூச்சப்படுவதே இல்லை. லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் விசாரணை என்பது பெயரளவிலேயே உள்ளது; முறையான விசாரணை, சோதனைகள் இல்லை. தற்போதைய லஞ்ச ஒழிப்புத்துறைப் பெயரளவில் மட்டுமே செயல்படுகிறது; வருடத்திற்கு 100 வழக்குகள் எனப்பதிவு செய்கின்றனர் என்று கூறி மனுதாரருக்கு ஜாமீன் வழங்க மறுத்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Advertisment

Judge madurai high court vigilance officers
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe