ADVERTISEMENT

மின்துறை அமைச்சரின் ஆசிபெற்ற அதிகாரி மீது பாய்ந்த விஜிலென்ஸ்...!

12:12 PM Jan 04, 2020 | Anonymous (not verified)

மின்துறை அமைச்சர் தங்கமணியின் ஆசிபெற்ற அதிகாரியாக இருப்பவர் மின்வாரிய தலைமை பொறியாளர் நந்தகோபால். கடந்த ஜனவரி 2ந்தேதி வேலூரில் உள்ள மின்துறையின் ஆய்வு மாளிகையில் 2020 ஆங்கில புத்தாண்டையொட்டி வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை மாவட்டங்களில் பணியாற்றும் துறை அதிகாரிகளிடம் ஆங்கில புத்தாண்டுக்கான வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT



வாழ்த்துக்கள் என்கிற பெயரில் ஒவ்வொரு அதிகாரியும் தங்களது பதவிக்கு தகுந்தார்போல் தங்ககாசு, பணம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை அவருக்கு பரிசாக வழங்க வேண்டும், அப்படித்தான் வழங்கிக்கொண்டு இருந்தார்கள். இதுப்பற்றி அத்துறையை சேர்ந்த சிலர் வேலூர் லஞ்சஒழிப்புத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் தேவநாதனிடம் தகவல் கூறியுள்ளனர். அவர் ஆய்வாளர்கள் விஜய், ரஜினிகாந்த், விஜயலட்சுமி தலைமையில் தனித்தனியாக அந்த அலுவலகத்தை கண்காணிக்க வைத்தனர். மதியம் முதல் இவர்களது அணி கண்காணிப்பில் ஈடுப்பட்டு பரிசு பொருட்கள் தருவதை உறுதி செய்தனர்.

தலைமை பொறியாளர் நந்தகோபாலோடு, கிருஷ்ணகிரி மாவட்ட மேற்பார்வை பொறியாளர் சாக்கன் ஆகியோர் இருப்பதை உறுதி செய்துக்கொண்டு ஜனவரி 2ந்தேதி மாலை அந்த மாளிகைக்குள் புகுந்து இருவரையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். செல்போன்களை பறிமுதல் செய்து அதனை சுச் ஆப் செய்தனர்.

அதன்பின் அவர்களுக்கு வந்த பரிசு பொருட்களான பணம் மற்றும் தங்ககாசுவை எண்ணியபோது, 1 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 48 கிராம் தங்க நாணயம், வெள்ளி பொருட்கள் மற்றும் 30 செட் விலை உயர்ந்த சபாரி செட் துணியை பறிமுதல் செய்தனர். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேல் நடவடிக்கை தொடர்பாக துறை தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளனர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார்.

உங்களுக்கு பரிசு பொருட்கள் தந்தது யார், யார் என தகவலை அந்த அதிகாரிகளிடம்மே பெற்ற போலீஸார், அது தொடர்பாக ஒரு பட்டியலை தயார் செய்ய தொடங்கியுள்ளனர். அவர்களை தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT