ஜல்லிக்கட்டில் மலர்ந்த காதல்; வாடிவாசல் முன்புதான் கல்யாணம்! - ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த காதலர்கள்!

Viewers in 2017 ... Lovers who petitioned the Collector to get married in Vadivasal in 2020 ..!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில்,ஜல்லிக்கட்டு நடைபெறும் நாளன்று வாடிவாசல் முன்பு திருமண உறுதியேற்பு நிகழ்ச்சி நடத்த காதலர்கள் மனுகொடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளரான கார்த்திகேயன் (32), மற்றும்சமூக ஆர்வலர் வித்தியாதரணி (28) ஆகிய இருவரும் கடந்த 2017ஆம் ஆண்டு அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டின்போது பார்வையாளர்களாகப் பங்கேற்றனர். அப்போது இருவரும் சந்தித்து,பின்னர் நண்பர்களாகப் பழகி, கடந்த 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், இருவருடங்களுக்குப் பின்னர் திருமணம் செய்துகொள்ள விரும்பிய இருவரும், வீட்டாரின் சம்மதத்துடன் மணமுடிக்க முடிவுசெய்தனர். இருவரும் சந்தித்துக் கொண்ட அதே தேதியில், குறிப்பாக 2021ஆம் ஆண்டு நடைபெற உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில், வாடிவாசல் முன்புதிருமண உறுதியேற்பு நிகழ்ச்சி நடத்துவதற்காக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்துள்ளனர்.

உலகப் புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் பங்கேற்று துவங்கிவைக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

jallikattu
இதையும் படியுங்கள்
Subscribe