Advertisment

'தமாகா நிர்வாகிகள் ராஜினாமா செய்வதன் காரணம் இதுதான்'-விளக்கம் கொடுத்த விடியல் சேகர்  

Vidyal Shekhar explains 'resignation is for party reform

Advertisment

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில், மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப வேண்டும். மாதாந்திர கட்டணத்தை மாற்றி மக்கள் எளிதில் பயன்பெறும் வகையில் மின்சார துறையில் பல்வேறு புதிய திட்டங்களை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் விடியல் சேகர், 'தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் நிர்வாகிகள் ராஜினாமா செய்து வருவது குறித்த சர்ச்சைக்கு, கட்சியின் நிர்வாக சீரமைப்பிற்காக அவர்கள் ராஜினாமா செய்துள்ளதாகவும், இந்த நடவடிக்கை என்பது கட்சியில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைமுறையில் உள்ள இயல்பான ஒன்று என்பதால் இதில் அரசியல் எதுவும் இல்லை என கூறிய அவர், புதிய நிர்வாகிகள் பட்டியலை ஜி.கே.வாசன் விரைவில் வெளியிடுவார் எனவும்தெரிவித்தார்.

politics tmc
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe